கம்பராமாயணம் 5945 · சுந்தர 14.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொடியைப் பற்றி விதானம் கொளுவி தான்
நெடிய தூணைத் தழுவி நெடும் சுவர்
முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்றால்;
கடி கொள் மா நகர் தோறும் கடும் கனல்.
பொருள் · Meaning in Tamil
கடும் கனல் - (அனுமன்வாலில் இட்ட) கொடிய நெருப்பு; கடிய மாமனை தோறும் - காவலை உடைய பெரிய மாளிகைகளில் எல்லாம்; கொடியைப் பற்றி - கொடிகளைப்பற்றிக்கொண்டும்; விதானம் கொளுவி - மேற் கட்டிகளைச்சரித்தும்; நெடிய தூணை தழுவி - உயர்ந்த தூண்களைச் சூழ்ந்தும்; நெடுஞ்சுவர் முடிய சுற்றி - நீண்ட சுவர்களை முழுவதும் சுற்றிக் கொண்டும்; முழுதும் முருக்கிற்று - அம்மாளிகைகள் முழுவதையும் எரித்து அழித்தது;
முருக்கிற்று -அழித்தது; கடி - காவல்; கனல் - நெருப்பு; தான், ஆல்; அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seizing the banners, catching the canopies,
- embracing the tall pillars, wrapping the long walls
- right to the top, it consumed everything,
- the fierce fire, in every great guarded mansion.
What the poem says
The chapter of the burning of Ilaṅkai begins. The fire from Aṉumaṉ's tail climbs the banners, catches the canopies, coils round the pillars and walls of every guarded mansion, and consumes them entirely.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭiyaip paṟṟi vitāṉam koḷuvi tāṉ
neṭiya tūṇait taḻuvi neṭuñ cuvar
muṭiyac cuṟṟi muḻutum murukkiṟṟāl;
kaṭiya māmaṉai tōṟum kaṭuṅ kaṉal.