கம்பராமாயணம் 5951 · சுந்தர 14.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்கு ஓர்- அக்காலத்தில், முதலில் ஒரு; குறள் உரு ஆய்- வாமனவடிவாகச் சென்று; தர - (மாவலி தனக்குக்) கொடுக்க; உலகங்கள் அடி தாய் அளந்து கொள்வான் - மூவுலகங்களையும், தன் அடிகளால் தாவி அளந்து கொள்ளும் பொருட்டு; மீ எழுந்த கரியவன் மேனியின் - மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின் திரு மேனியைப் போல, வெம் புகை எழுந்து போய் பரந்தது ஆயது - வெப்பமான புகை, மேல் எழுந்து சென்று எங்கும் பரந்ததாக ஆயிற்று.
மேல் எழுந்தகரும்புகை, உலகம் அளக்க எழுந்த திரிவிக்கிரமனான திருமாலைப் போல ஆயிற்று என்க. நிறத்தாலும், மேல் எழுதலாலும் வெம்புகை, திருமாலை ஒத்திருந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, like the body of the Dark One, who once took a dwarf's form
- and rose up high to stride and measure
- the worlds that were given him,
- the hot smoke rose, went up, and spread everywhere.
What the poem says
The black smoke rising and spreading over the sky is like Tirumāl in his dwarf incarnation, who, given three paces of land by the king Māvali, grew to cosmic size and measured all the worlds. The smoke matches him both in its dark colour and in its towering rise.