கம்பராமாயணம் 5952 · சுந்தர 14.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலம் நின்றநிறத்தன - கருநிறம்பொருந்தியனவாய் இருந்த; தோல் எலாம் - யானைகள் எல்லாம்; மேல் எரி விழுந்து முற்றும் விழுங்கலால் - தம்மீது நெருப்பு விழுந்து உடம்பு முழுவதும் பற்றிக் கொண்டதனால்; தோல் உரிந்து கழன்றன - தோல்கள் உரிந்து நீங்கப் பெற்றவையாய்; கீழ் நிலை மாலின் - கிழக்குத் திசையில் உள்ள இந்திரனுடைய; வெம்சின யானையை மானுவ - கொடிய கோபத்தோடு கூடிய ஐராவதம் என்னும் (வெள்ளை) யானையை ஒத்தனவாயின.
தீப்பற்றியதனால் தோல் உரிந்து வெள்ளெலும்பு தோன்ற நின்ற யானைகள், இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானையை ஒத்திருந்தன என்க. மால் - இந்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those whose colour had been dark blue
- came to resemble the fierce-tempered elephant of the lord of the east;
- because the fire fell on them and swallowed them whole,
- their skins peeled away and came off, all of them.
What the poem says
Ilaṅkai's dark war elephants have their hides burned off by the falling fire, and, now showing white, they look like Airāvatam, the white elephant of Intiraṉ, guardian of the east.