கம்பராமாயணம் 5961 · சுந்தர 14.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேன் அவாம்பொழில் - தேன் மிக்க(அந்நகரத்துச் சோலைகளில்; தீ பட - நெருப்புப் பற்ற (அதனால்); சிந்திய - சிதறிய; சோனைமாமலர் தும்பி - நீருண்ட மேகம் போல மலர்களில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள்; தொடர்ந்து அயல் போன - அந்தச் சோலைகளைத் தொடர்ந்து அப்பாலும் பரவிச் சென்ற; தீ சுடர் - நெருப்புச் சுடர்களை (கண்டு); புண்டரிகத்தடம் கானம் ஆம் என வீழ்ந்து கரிந்த - பெரிய தாமரைக்காடுஎன்று மாறாகக் கருதி, அவற்றில் போய் விழுந்து கருகிப் போயின.
நெருப்புச்சுடரின் மிகுதியான தோற்றத்தை, தாமரைக்காடு என மாறாகக் கருதிய வண்டுகள் அதில் விழுந்து கருகின என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When fire caught the honey-filled groves, the bees that had swarmed like rain clouds
- over the great flowers were scattered; seeing the flames of fire
- that spread on beyond the groves, they took them for a wide forest of lotuses,
- and fell into them and were burned.
What the poem says
Bees driven from the burning groves see the masses of red flame spreading beyond and mistake them for a great lotus forest. They dive into them and are scorched to death.