கம்பராமாயணம் 5972 · சுந்தர 14.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வரையினை புரைமாடங்கள் எரி புக - மலையை ஒத்த மிகப் பெரியமாளிகைகளில் நெருப்புப் பற்றிக் கொள்ள; மகளிர் - அங்கிருந்த அரக்கமாதர்கள்; புரை இல் பொன் கலன் வில்லிட - குற்றமற்ற அழகிய பொன்மயமான தமது ஆபரணங்கள் ஒளி வீச; விசும்பிடை போவார் - வானத்தில் எழுந்து சென்றவர்களாய்; கரை இல்நுண் புகை படலையில் கரந்தனர் - அளவு இல்லாத நுண்ணிய புகையின் திரளிலே மறைந்தார்கள்: (அதனால், அவர்கள் கலிங்கம் திரையினுள் பொலி சித்திரம் பாவையின் செயலார் - கலிங்க நாட்டில் நெய்த துணித் திரையின் உள்ளே விளங்குகின்ற அழகிய பதுமையின் செயலை அடைந்தவர்களாயினர்.
நுண்புகைத்தொகுதிக்கு, கலிங்கத்திரையும், அழகிய மகளிர்க்கு சித்திரப் பதுமையும் உவமைகள். கலிங்கத்திரை - கலிங்க நாட்டுத் துணியால் ஆன திரைச் சேலை. பாவை - பெண் போன்ற ஓவியம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As fire entered the mansions that were like mountains, the women,
- their flawless golden jewels flashing, went up into the sky
- and were hidden in the endless veil of fine smoke, looking
- like painted dolls glowing behind a screen of Kaliṅga cloth.
What the poem says
Demon women fly up from their burning mansions, their gold ornaments flashing, and are veiled by the thin smoke. They look like painted figures glimpsed through a curtain of fine cloth from Kaliṅga, famed for its weaving.