கம்பராமாயணம் 5973 · சுந்தர 14.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பகரும் ஊழியில். நூல்களில் கூறப்படுவதான யுக முடிவுக் காலத்தில்; காலம் வெம் கடும் கனல் பருகும் மகர வேலையின் - மிகக் கொடிய காலாக்கினி உறிஞ்சி வற்றச் செய்யும் மகரம்முதலிய மீன்கள் வாழும்கடல்கள் (அழிந்தன) போல; அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் புகர் இல் நல் மரத்து உறு வெறி - அகில் மரங்களும், நறுமணம் உள்ள சந்தனமரங்களும் முதலான குற்றம் அற்ற சிறந்த பல மரங்களில் பொருந்திய நறுமணம்; உலகு எலாம் போர்ப்ப - உலகம் முழுவதும் வீசிக் கவிந்து கொள்ளுமாறு; நந்தன வனங்கள் - இலங்கையில் இருந்த சிங்காரத் தோட்டங்கள்; வெந்தன - அத்தீயில் வெந்து அழிந்தன.
கால முடிவில், காலக் கொடுந்தீயால், கடல் நீர் வற்றி அழிவது போல, அனுமன் வைத்த தீயால், இலங்கை நகரத்துப் பூந்தோட்டங்கள் அழிந்தன என்பதாம். அகர் - அகில்; புகர் - குற்றம்; வெறி - மணம்; போர்ப்ப - மூட.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the scent of aloe wood, fragrant sandal and many other
- flawless fine trees spread over all the world,
- like the sea full of sea-monsters that the fierce fire of time drinks up at the destined end of the age,
- the pleasure gardens burned.
What the poem says
Ilaṅkai's pleasure gardens burn like the oceans dried up by the fire at the end of an age, and the fragrance of their burning aloe and sandalwood spreads over the whole world.