கம்பராமாயணம் 5974 · சுந்தர 14.30

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மினை பரந்து எழுகொழும் சுடர்- மின்னலைப் போல ஒளிபரவி எழும் செழுமையான அனல் கொழுந்து; உலகு எலாம் விழுங்கி - உலகம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு; நினைப்பு அரும் பெரும் திசை உற - நினைப்பதற்கு அரிய பெரிய திசைகளைப் போய் அடைய; விரிகின்ற நிலையால் - பரந்து விளங்கும் தன்மையால்; கற்பகம் கானம் வெங்கனல் பரந்த சிலவும் - கற்பகச் சோலைகள் கொடிய நெருப்புப் பற்றி எரிகின்றவை இவை சில என்றும்; சினை பரந்து எரி சேர்ந்திலா நின்ற சிலவும் - கிளைகளில் தாவி நெருப்புப் பற்றாது நின்றவை இவை சில என்றும்; தெரிகில - வேறுபாடு அறிய வொண்ணாதனவாயிருந்தன.

இலங்கையில் இருந்தகற்பகச் சோலைகள் இயற்கையில் ஒளியுடைமையால் அனுமன் இட்ட தீயால் எரிந்தவை இவை என்றும் எரியாதவை இவை என்றும் அறிந்து கொள்ள முடியாதபடி விளங்கின என்பதாம். போந்து - போல, சினைப் பரந்து- கிளைகளில் தாவி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rich flames spreading like lightning swallowed all the world
  2. and spread out to reach the vast directions beyond thought,
  3. one could not tell which of the wish-granting groves had caught fire
  4. and which stood untouched, their branches spread.

What the poem says

The wish-granting trees of Ilaṅkai's groves shine naturally with their own radiance, so with the lightning-bright flames spreading in every direction no one can tell which groves are burning and which are not.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉaip parantu eḻu koḻuñ cuṭar, ulaku elām viḻuṅka,
niṉaippu arum perun ticai uṟa virikiṉṟa nilaiyāl,
ciṉaip parantu, eri cērntilā niṉṟavum, cila, veṅ
kaṉal parantavum, terikila; kaṟpakak kāṉam