கம்பராமாயணம் 5978 · சுந்தர 14.34

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி, மற்று ஒரு மகவு பின் அரற்ற,
நெருங்கி, நீரொடு, நெறிகுழல் சுறுக் கொள நீங்கிக்
கரும் கடல் தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி.

பொருள் · Meaning in Tamil

மருங்கின் மேல்ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொரு சிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் - அரக்கமாதர்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி - தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக் கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்றுநெருப்புபற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய் விழுந்தார்கள்.

அரக்கியர்கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக் கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With one child on her hip, holding another little child
  2. by her precious hand, while yet another cried behind her,
  3. the demon women, with those close to them, fled as their curled hair caught with a hiss,
  4. and fell, screaming, into the dark sea.

What the poem says

A vivid picture of the mothers of Ilaṅkai fleeing the fire, one child on the hip, another held by the hand, a third wailing behind, with their kin around them. When their hair catches fire they leap screaming into the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruṅkiṉ mēl oru makavu koṇṭu, oru taṉi makavai
aruṅ kaiyāl paṟṟi, maṟṟoru makavu piṉ araṟṟa,
neruṅkiṉāroṭu, neṟikuḻal cuṟuk koḷa nīṅkik
karuṅ kaṭal talai vīḻntaṉar arakkiyar kataṟi.