கம்பராமாயணம் 5977 · சுந்தர 14.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரிந்து சிந்திடகடுங்கனல் தொடர்ந்து உடல் கதுவ - கருகி உதிர்ந்து போகும்படி கொடிய நெருப்பு தொடர்ந்து அரக்கர்களது உடல்களைப் பற்றலும்; உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் - (அதனால்) தோல் உரியப் பெற்ற உடலினராய் ஓடிப் போய் (வெப்பம் தணிவதற்காக) கடல் நீரில் மூழ்கி மறைந்து கொண்டவர்களாயினர்; விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் - (அரக்கரின் பெண்டிர் ஆடவர் என்ற இருபாலாரின் விரிந்த தலைமயிரும் (அக்கடலில்) மிகுந்து நிறைந்தமையால்; எறி திரை பரவை தாமும் எரிந்து வேகின்ற ஒத்தன - வீசும் அலைகளை உடைய கடல்களும் தீப்பட்டு, வேகின்றவை போன்றன.
அரக்கர்களின்தலைமயிர் செம்பட்டையாதலின், கடற்பரப்பில் அவை நெருங்கித் தோன்றியது. கடல் தீப்பற்றியது போல் காணப்பட்டது என்பது கற்பனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the fierce fire followed and seized their bodies, so that they were charred and fell apart,
- they ran, their skins peeling, to hide in the water;
- because their spread tresses and topknots crowded it,
- the wave-tossed seas themselves seemed to be on fire and burning.
What the poem says
Demons whose skins are peeling in the flames run into the sea to hide. The reddish hair of so many men and women floating on the waves makes the sea itself look as if it were burning.