கம்பராமாயணம் 5976 · சுந்தர 14.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மிக்க வெம் புகைவிழுங்கலின் - மிகுதியான கொடிய புகைஉலகம் எங்கும் கவிழ்ந்து கொண்டமையால்; வெள்ளி அம் கிரியும் வெற்பினோடு ஒக்க - வெள்ளிய அழகிய கைலைமலையும் ஏனைய மலைகளைப் போலக் கருநிறம் பெற்றது; அன்னமும் காக்கையின் உருவ - வெள்ளை அன்னமும் காக்கையின் கருநிறத்ததாயிற்று; பாற்கடல் பக்க வேலையின் படியது - வெண்மையான பாற்கடலும் அருகில் உள்ள கடலின் தன்மையாய் கருங்கடலாயிற்று; முடிவில் திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா- எல்லைக் கோடியில் உள்ள ஐராவதம் முதலிய (வெண்ணிற மான) திசையானைகளுக்கும் ஏனைய கருநிறயானைகளுக்கும் வேறுபாடு தெரியாததாயிற்று. புகை சூழ்ந்த பின்னர் இயற்கையாக வெண்ணிற மாய் உள்ள சிறந்தவை அனைத்தும் கருநிறத்ததாயின என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the dense hot smoke swallowed everything, the silver mountain
- became like other hills, the swan took the colour of the crow,
- the milk ocean became like the sea beside it, and at the edges of the world
- the quarter-elephants and other elephants could not be told apart.
What the poem says
The smoke blackens everything white in the universe: Kailāsam, the silver mountain, looks like any dark hill; swans look like crows; the milk ocean looks like the ordinary sea; and the white elephants guarding the directions cannot be told from common dark elephants.