கம்பராமாயணம் 5982 · சுந்தர 14.38

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீரை வற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவித்
தாருவைச் சுட்டு மலைகளைத் தணல் செய்து தனிமா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது; உயர் தீ.

பொருள் · Meaning in Tamil

உயர் தீ- உயர்ந்துஎழுந்த அந்த நெருப்பு; நீரை வற்றிட பருகி - கடல், குளம் முதலிய எல்லா நீர்நிலைகளும் வற்றிப் போகும் படி உறிஞ்சி; மாநெடுநிலம் தடவி- பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரந்து அழித்து; தாருவை சுட்டு - அங்குள்ள மரங்களை எரித்து; மலைகளை தழல் செய்து - மலைகளைத் தணல் போல விளங்கும்படி வேகச் செய்து; தனி மா மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்- ஒப்பற்ற மகா மேரு மலை என்னும் மலையைப் பற்றி எரிகின்ற வெவ்விய கற்பாந்த காலத்து அக்கினி போன்று, ஊரை முற்றுவித்து - அந்த இலங்கை நகர் முழுவதையும் எரித்துவிட்டு; இராவணன் மனை புக்கது - இராவணனுடைய அரண்மனையுள் புகுந்தது.

ஊழிக் காலத்துநெருப்பு, சுற்றிலும் எரித்த பின்பு, நடுவில் உள்ள மேருமலையில் புகுவது போல, அனுமன் இட்ட தீ, இலங்கை நகர் முழுவதையும் எரித்த பிறகு, இடையில் உள்ள இராவணன் மாளிகையில் புக்கது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drinking the waters dry, sweeping over the great wide land,
  2. burning the trees, turning the mountains to glowing coals,
  3. like the hot fire at the end of time that seizes and burns matchless great Mēru,
  4. the high fire finished the city and entered Irāvaṇaṉ's palace.

What the poem says

Having burned all of Ilaṅkai, drying up its waters, consuming its land and trees and turning its hills to embers, the fire enters Irāvaṇaṉ's palace at the centre, just as the fire at the end of an age burns everything around and then seizes Mount Mēru at the centre of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrai vaṟṟiṭap paruki mā neṭu nilam taṭavi
tāruvaic cuṭṭu malaikaḷait taḻal ceytu taṉimā
mēruvaip paṟṟi erikiṉṟa kāla veṅ kaṉal pōl
ūrai muṟṟuvittu irāvaṇaṉ maṉai pukkatu; uyar tī.