கம்பராமாயணம் 5983 · சுந்தர 14.39

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான மாதரூம் மற்று உள மகளிரும் மறுகிப்
போன போன திக்கு அறிவரும் இரியலர் போனார்;
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைவார்.

பொருள் · Meaning in Tamil

வான மாதரும் - இராவணன்மாளிகையில் இருந்த தேவ மகளிரும்; மற்றுள மகளிரும் - மற்றும் உள்ள (இயக்க கந்தருவ வித்தியாதரர் முதலான) பெண்களும்; அனைவரும் மறுகி - எல்லோரும் கலங்கி; போன போன திக்கு அறிகிலர் போனார் - அவரவர் போன திசை இன்னது என்று அறியாதவர்களாய் நிலை கெட்டுச் சென்றனர்; ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் - மற்றும் ஓடாமல் நின்றவர்கள் எங்கும் சுற்றித் திரிந்தவர்களாய்; இலங்கை கோன் - இலங்கைக்கு அரசனான இராவணன்; அவ்வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் - அந்தத் தேவர்களது தலைநகராகிய அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல நிலை குலைந்தார்கள்.

இராவணனதுமாளிகையைத் தீப்பற்றிய போது அங்கிருந்தவர்கள், பயந்து ஓடியது பற்றிக் கூறப்பட்டது. மேக நாதன் செயல் தகப்பன் இராவணன் மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The celestial women and all the other women, bewildered,
  2. went off, none knowing which way they went;
  3. those who remained fled everywhere; they were shattered
  4. as on the day the lord of Ilaṅkai seized the city of the gods.

What the poem says

In Irāvaṇaṉ's palace the captive women of heaven and other races flee in confusion. The panic is like the day the demon king, through his son Intiracittu, captured Amarāvati, the gods' capital.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉa mātarum maṟṟuḷa makaḷirum maṟukip
pōṉa pōṉa tikku aṟikilar aṉaivarum pōṉār;
ēṉai niṉṟavar eṅkaṇum irintaṉar; ilaṅkaik
kōṉ av vāṉavar pati koṇṭa nāḷ eṉak kulaintār.