கம்பராமாயணம் 5984 · சுந்தர 14.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாவியும் - (இராவணன்மாளிகையில் இருந்த) கத்தூரியும்; நறும் கலவையும் - வாசனை உடைய (குங்குமப் பூ முதலிய) கலப்புக்கு உரிய பொருள்களும்; கற்பகம் நக்க பூவும் - கற்பக மரங்களில் மலர்ந்த மலர்களும்; ஆரமும் - சந்தனமும்; அகிலும் - அகில் கட்டைகளும்; என்று இனையன - என்று சொல்லத்தக்க இவ்விதமான வாசனைப் பொருள்கள் எல்லாம்; புகைய - எரிந்து புகையாக, (அதனால்); திசையின் பாவை மார் நறுங்குழல்களும் பரிமளம் தேன் மழை செறி தேவு பெரும் குலம் என கமழ்ந்த - எட்டுத் திக்குகளைக் காக்கும் தெய்வமகளிரது இயற்கை மணம் கமழும் கூந்தல்களும் செயற்கை நறுமணம் பெற்று தேன்மழை பொழிகின்ற தெய்வத்தன்மை உடைய பெரிய மேகக் கூட்டம் போலத் தோன்றி மணம் வீசின.
இயற்கைமணத்தோடு செயற்கை மணமும் கமழும் திசைக்காவல் மகளிரது கூந்தலுக்கு, தேன் மழை பொழியும் மேகக் கூட்டம் உவமை ஆயிற்று. பரிமளம் மணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As musk, fragrant blended pastes, flowers blooming on the wish-granting trees,
- sandal and aloe wood, and such things, went up in smoke,
- the fragrant tresses of the maidens of the directions too breathed perfume,
- like a great host of divine clouds full of honey rain.
What the poem says
The stores of musk, fragrant pastes, heavenly flowers, sandal and aloe wood in Irāvaṇaṉ's palace burn, and their scented smoke spreads to the edges of the world. The divine women who guard the eight directions find their hair perfumed by it, and their tresses look like great clouds pouring a rain of honey.