கம்பராமாயணம் 5985 · சுந்தர 14.41

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூழும் வெம் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெம் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்,
ஊழி வெம் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன ஒத்தன, நெடும் நிலை ஏழும்.

பொருள் · Meaning in Tamil

சூழும் வெம் சுடர்தொடர்ந்திட - எங்கும் சூழ்ந்த கொடிய நெருப்புச்சுடர் போய்த் தாவியதனால்; யாவரும் தொடரா ஆழி வெம் சினத்துஆண் தொழில் இராவணன் - எவரும் அணுகமுடியாத கடல் போன்றகொடிய கோபத்தையும், வீரச் செயலையும் உடைய இராவணனது, மனையின்நெடு நிலை ஏழும் உலகம் என்று உயர்ந்த ஏழும் - மாளிகையின் நீண்டுஉயர்ந்த ஏழு நிலை மாடங்களும், ஒன்றன் மேல் ஒன்றாக உயர்ந்துள்ள, உலகம் என்று சொல்லப்படுகின்ற ஏழு இடங்களும்; ஊழிவெம்கனல் உண்டிடவெந்து என எரிந்தன - யுகாந்த காலத்துக் கொடிய நெருப்பு உண்ண எரிந்தாற் போன்றனவாய் வெந்து அழிந்தன. ஊழித்தீயில்மேலுலகங்கள் ஏழும் எரிந்து அழிந்தது போன்று, இராவணனது மாளிகையின் ஏழு நிலை மாடங்களும் எரிந்து அழிந்தன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the surrounding hot flames leapt on, in the palace of Irāvaṇaṉ,
  2. whom none could approach, of ocean-like fierce wrath and manly deeds,
  3. all seven of its tall storeys burned, as if the seven
  4. high worlds were burned when the fire at the end of the age devoured them.

What the poem says

The fire reaches Irāvaṇaṉ's seven-storeyed palace. Each storey burns in turn, like the seven upper worlds stacked one above another being consumed by the fire at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻum veñ cuṭar toṭarntiṭa, yāvarum toṭarā
āḻi veñ ciṉattu āṇ toḻil irāvaṇaṉ maṉaiyil,
ūḻi veṅ kaṉal uṇṭiṭa, ulakam eṉṟu uyarnta
ēḻum venteṉa erintaṉa, neṭu nilai ēḻum.