கம்பராமாயணம் 5986 · சுந்தர 14.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராவணன் - இராவணனுடைய; குன்றம் ஒத்து உயர் தட நெடு மாநிலை கோயில் - மலை போல் உயர்ந்ததும், அகன்ற நீண்டபெரிய நிலைகளைஉடையதுமான அரண்மனை; புரை தீர் பொன் திருத்தியது ஆதலால் - குற்றமற்ற பொன்னால் அமைக்கப்பட்டதாதலால்; எரி நின்று, துற்றுபருகிட - நெருப்பு எழுந்து வாயினால் கவ்விக் குடிப்பது போல் எரிப்பதனால்; நெகிழ்வு உற உருக - நெகிழ்ந்து உருகி, (ஒரே திரளாக); தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த - தெற்குத்திக்கிலும் ஒரு மேரு மலை உள்ளது என்று சொல்லும்படி காணப்பட்டது. மேரு மலை வடதிசையில் உள்ளது என்பது புராணக் கொள்கை. இராவணன் மாளிகை மலை போல் உயர்ந்து பொன்னால் அமைக்கப்பட்டதால், அது நெருப்பில் உருகி ஒன்றாகத் திரண்டு, தென்திசை மேரு மலைபோல் தோன்றிற்று என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because it was wrought of flawless gold, Irāvaṇaṉ's palace,
- tall like a mountain with wide, long, great storeys,
- melted and slumped as the fire rose and gulped it down,
- so that it seemed there was now a Mēru in the south as well.
What the poem says
Being made of pure gold, Irāvaṇaṉ's mountainous palace melts in the fire and runs together into one great golden mass. In legend Mount Mēru, the golden mountain, stands in the north; now it looks as if the south has a Mēru of its own.