கம்பராமாயணம் 5987 · சுந்தர 14.43

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும் மாத்திரை யாவரும்; நீங்கினர்; நீங்கா
வினை இலாமையில் வெந்தது, அவ் விலங்கல் மேல் இலங்கை.

பொருள் · Meaning in Tamil

அனைய காலையில் அவ்வாறுஇராவணன் மனை வேகின்ற அப்பொழுது; அரக்கனும், அரிவையர் குழுவும் - தலைமை அரக்கனாகிய இராவணனும், அவனது உரிமை மகளிர் கூட்டமும், மணி புனை பொலி புட்பக விமானத்து போனார் - இரத்தினங்களால் அமைக்கப்பெற்று விளங்குகின்ற புட்பக விமானத்தில் ஏறி மேலே சென்றனர்; யாவரும் - இறந்தவர் போக மற்றைய அரக்கர்களும்; நினையும் மாத்திரை நீங்கினர் - நினைத்த அளவில் அவ்விடம் விட்டு அகன்றனர்; நினையும் வினை இலாமையின் - அவ்வாறு நினைக்கும் செயலைச் செய்யும் தன்மை தனக்கு இல்லாததால்; அவ்விலங்கல் மேல் இலங்கை வெந்தது - அந்த மலையின் மீது இருந்த இலங்கை நகர் வெந்து அழிந்தது.

நினைத்ததைச்செய்யக் கூடியவர்கள் அரக்கர்கள். அஃறிணைப் பொருளாகிய இலங்கைநகர் அவ்வாறு செய்ய முடியாததால் நெருப்பில் வெந்து அழிந்தது என்பது கருத்து. நினையும் மாத்திரை - மிகச் சுருங்கிய காலம்; புட்பக விமானம் - இராவணனது வானவூர்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the demon king and his throng of women
  2. went off in the Puṣpaka chariot shining with set gems;
  3. all the others left in the time it takes to think; having no power
  4. to act by thought, Ilaṅkai on that mountain burned.

What the poem says

As the palace burns, Irāvaṇaṉ and his women escape into the sky in his flying chariot, the Puṣpakam, and the surviving demons vanish as fast as thought. The city alone, which has no power to move at will, cannot flee, and Ilaṅkai on its mountain burns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya kālaiyil arakkaṉum, arivaiyar kuḻuvum,
puṉai maṇip poli puṭpaka vimāṉattup pōṉār;
niṉaiyum māttirai yāvarum; nīṅkiṉar; niṉaiyum
viṉai ilāmaiyiṉ ventatu, av vilaṅkal mēl ilaṅkai.