கம்பராமாயணம் 5988 · சுந்தர 14.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழித் தேரவன் - ஆணைச்சக்கரத்தை உடையவனாய்ப் பெருந்தேர் வீரனான இராவணன்; அரக்கரை அழல் எழ நோக்கி - தன்னுடன் வந்த அரக்கர்களைத் தன்கண்களில் கோபத் தீ பொங்கும் படிப் பார்த்து; ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் - (பதினான்காக) ஒன்றன் மீது ஒன்று என ஏழொடு ஏழாக அடுக்கம் பெற்ற உலகங்கள்; எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ ? பிறிது வேறு உண்டோ ? - எரியும் கற்பாந்த காலம் வந்து சேர்ந்ததோ ? வேறு ஏதேனும் உண்டாயிற்றோ ? பாழி தீ சுட நகர் வெந்தது என் ? - பெரு நெருப்பு எரித்ததால், இந்த இலங்கை நகர் வெந்ததற்குக்காரணம் என்ன; என பகர்ந்தான் - என்று கேட்டான். ஊழிக்காலத்தில்பதினான்கு உலகங்களும் தீயினால் அழியும். அந்த ஊழிக்காலம் வந்து விட்டதா? அல்லது இலங்கை வெந்து அழிவதற்கு வேறு காரணம் உண்டா? என்று இராவணன் அரக்கரைப் பார்த்துக் கேட்டான். ஏழுக்கு ஏழ் - பதினான்கு. பாழி - பெருமை. “பாழியந் தோளால் வரை எடுத்தான்' - (திருவாய் மொழி 10. 4. 8)
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of the wheeled chariot looked at the demons with fire rising in his eyes:
- 'Has the end of the age come, when the worlds stacked seven on seven
- burn? Or is it something else?
- Why is the city burned up by this great fire?' he said.
What the poem says
Irāvaṇaṉ, eyes blazing with anger, demands of his demons whether the end of the world has come, when the fourteen worlds, seven above and seven below, are consumed by fire, or whether there is some other cause for the burning of his city.