கம்பராமாயணம் 5989 · சுந்தர 14.45

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரங்கள் கூப்பினர், தங்களைத் திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் :'இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது'என்று உரைத்தலும், இராவணன் கொதித்தான்.

பொருள் · Meaning in Tamil

தம் கிளைதிருவொடும் காணார் - (அவ்வாறு இராவணன் கேட்டதும்) தமது சுற்றத்தாரையும் வீரம் செல்வம் முதலிய பொலிவையும் இழந்து; இரங்குகின்ற வல் அரக்கர்- ஏங்கிக் கொண்டிருக்கின்ற வலிய அரக்கர்கள்; கரங்கள் கூப்பினர் ஈது இயம்பினர் - கைகளைக் கூப்பிக் கொண்டுபின்வரும் இச்செய்தியைச் சொன்னார்கள்; இறையோய் ! - அரசனே !; தரங்க வேலையின் நெடியதன் வால் இட்டதழலால் - அலைகளை உடையகடலினும் நீண்ட தனது வாலிலே நாம் வைத்த நெருப்பால்; குரங்கு சுட்டது ஈது என்றலும் - அக்குரங்கு எரித்தது இதுவாகும் என்று சொன்ன உடன்; இராவணன் கொதித்தான் - இராவணன் கோபம் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With joined hands, the strong demons, who could not find their kin or their fortune,
  2. and were grieving, said this: 'O king!
  3. With the fire set on its own tail, longer than the wave-filled sea,
  4. the monkey has burned this.' At that, Irāvaṇaṉ seethed.

What the poem says

The demons, who have lost their families and wealth, tell Irāvaṇaṉ with folded hands that the monkey burned the city with the fire they themselves set on its tail, a tail longer than the ocean. Irāvaṇaṉ boils with rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karaṅkaḷ kūppiṉar, tam kiḷai tiruvoṭum kāṇār,
iraṅkukiṉṟa val arakkar ītu iyampiṉar:'iṟaiyōy!
taraṅka vēlaiyiṉ neṭiya taṉ vāl iṭṭa taḻalāl,
kuraṅku cuṭṭatu ītu'eṉṟalum, irāvaṇaṉ kotittāṉ.