கம்பராமாயணம் 5990 · சுந்தர 14.46

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கை
நின்று வெந்து மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று நன்று போர் இராவணன் வலி'என நக்கான்.

பொருள் · Meaning in Tamil

இன்று - இன்றைக்கு; புன் தொழில் குரங்கு தன் வலியினால் - அற்பத் தொழிலை உடைய (ஒரு) குரங்கினது வலிமையினால்; இலங்கை நின்று வெந்து மாநீறு எழுகின்றது - இலங்கை நகர் நின்று எரிந்து பெருஞ் சாம்பல் பறக்கின்றதாயிற்று; நெருப்பு தின்று தேக்கிடுகின்றது - நெருப்பு நகரத்தை உண்டு ஏப்பம் விடுவதாயிற்று; தேவர் சிரிப்பார் - (இதனைக் கண்டால், நமக்குத் தோற்றுவலி இழந்த) தேவர்களும் நகைப்பார்கள்; போர் வலி நன்று நன்று என - தமது போர்த்திறமை மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லி; இராவணன் நக்கான் - இராவணன் (வெகுளி மேலீட்டால் சிரித்தான்.

இலங்கைஎரியுண்டதற்கு, இராவணன் நாணம் தோன்ற, கோபத்தோடு நக்கான் என்க. தேக்கிடுதல் - நிறைந்து ஏப்பம் விடுதல். 'தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்” என்ற திருவாய் மொழித் தொடர் (2.1.3) விளக்கத்துக்கு “செந்தீ உண்டு தேக்கிட்டதே' என்று மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Today, by the strength of a monkey of base deeds, Ilaṅkai
  2. stands burning and great ash rises; the fire
  3. has eaten and is belching; the gods will laugh;
  4. fine, fine is our might in war!' and Irāvaṇaṉ laughed.

What the poem says

Irāvaṇaṉ laughs in bitter fury and shame. A mere monkey has reduced Ilaṅkai to ash, the fire has gorged itself and belches, and the gods he once defeated will mock him. 'Fine, fine' is sarcasm aimed at his own famous strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṟu puṉ toḻil kuraṅku taṉ valiyiṉāl ilaṅkai
niṉṟu ventu mā nīṟu eḻukiṉṟatu; nerupput
tiṉṟu tēkkiṭukiṉṟatu; tēvarkaḷ cirippār;
naṉṟu naṉṟu pōr vali'eṉa irāvaṇaṉ nakkāṉ.