கம்பராமாயணம் 6009 · சுந்தர 15.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரைவின்நீங்குவென் என்னும் நினைவினன் - சீக்கிரத்தில் இந்த இலங்கையினின்றும் போவேன் என்கின்ற எண்ணம் உடையவனாய், ஆங்கு மருங்கு நின்றது ஒரு குடுமிக்குன்றை - அந்த இலங்கையின் அருகேயிருந்த சிகரத்தை உடைய ஒரு மலையை; அருக்கனின் அணைந்த ஐயன் - சூரியனைப் போன்று சென்று சேர்ந்த அனுமன்; உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீங்கினன் - எல்லா உலகங்களையும் உட் கொண்டவனான திருமால் போன்று தன் வடிவம் பூரித்து நின்று; வீரன் பூங்கழல் தொழுது - இரகு குல வீரனான இராமபிரானது அழகிய திருவடிகளை, (தனது மனத்தால் நினைத்து) வணங்கித் துதித்து; விசும்பிடை கடிது போனான் - ஆகாய வழியாக விரைவில் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, 'I shall leave quickly,'
- the lord who had reached a crested hill there like the sun
- swelled as if he had swallowed all the worlds, and bowing
- to the hero's flowered feet in praise, went swiftly through the sky.
What the poem says
The chapter 'Worshipping the Holy Feet' opens. Eager to be gone, Aṉumaṉ climbs a peak near Ilaṅkai, grows to an immense size like Tirumāl who holds all the worlds within him, bows in his mind to Irāmaṉ's feet, and leaps into the sky.