கம்பராமாயணம் 6008 · சுந்தர 14.64

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தெள்ளிய மாருதி சென்றான்
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளலர் பற்றுவர்'என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான்.

பொருள் · Meaning in Tamil

தெள்ளிய மாருதி- தெளிந்த ஞானமுடைய அனுமனே; சென்றான் - போய்விட்டான்; கள்ள அரக்கர்கள் கண்டால் எள்ளுவர் பற்றுவர் என்னா- திருட்டுச் செயலுக்குரிய அரக்கர்கள் என்னைக் கண்டால் நிந்தித்து என்னைப் பிடித்துச் செல்வர்என்று நினைத்து; ஒள் எரி யோனும் ஒளித்தான் - ஒளி பொருந்திய அக்கினித் தேவனும் தன்னை மறைத்துக் கொண்டான்.

இது காறும்இராவணனுக்கு அஞ்சி அடங்கியிருந்த அக்கினி தேவன், அனுமனை அண்டை கொண்ட பலத்தால், இலங்கை நகரை எரித்தான். இப்போது அனுமன் இலங்கையை விட்டுச் சென்று விட்டதால், அரக்கர்கள் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் தன்னை மறைத்துக் கொண்டான் அக்கினி தேவன் என்பதாம்,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The clear-minded son of the Wind has gone;
  2. if the deceitful demons see me
  3. they will scorn me and seize me,' thinking so,
  4. the god of bright fire too hid himself.

What the poem says

The fire god, who dared to burn Ilaṅkai only with Aṉumaṉ's backing, now fears that the demons will catch him and punish him, so he hides. This ends the chapter of the Burning of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'teḷḷiya māruti ceṉṟāṉ
kaḷḷa arakkarkaḷ kaṇṭāl
eḷḷuvar paṟṟuvar'eṉṉā
oḷ eriyōṉum oḷittāṉ.