கம்பராமாயணம் 6011 · சுந்தர 15.3

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர், மன்னோ
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தனர்; பறவைப் பார்ப்பு
தாய் வரக் கண்டது அன்ன உவகையின், தளிர்த்தார் அம்மா.

பொருள் · Meaning in Tamil

வாம் வெரீஇ நின்ற வானர வென்றி வீரர் - (அனுமன் நிலை யாதாகுமோ என்ற அச்சத்துடன்) வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்த வெற்றிக்குரிய (அங்கதன் முதலிய) வானர வீரர்கள்; போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க - (பிராட்டியை அனுமன் தேடிக் கண்டு பிடித்து) மீண்டு வருதலாகிய தம் செயல் முற்றுப் பெற்றது என்பதனாலாகிய ஒப்பற்ற மகிழ்ச்சி அதிகப்பட; பாய் வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்பு - (தாய்ப்பறவை ஆவலோடு) பாய்ந்து உட்புக வரும் கூட்டினிடத்து இருந்தனவாகிய பறவைக்குஞ்சுகள்; தாய் வர கண்டது அன்ன - தமது தாய்ப் பறவை (வெளியிற் சென்றது) மீண்டு வர, (அதனைப்) பார்த்ததைப் போன்ற; உவகையின் தளிர்த்தார் - மகிழ்ச்சியினால் உடல் பூரித்தார்கள்.

வானர வீரர் பொம்மல் பொங்க உவகையின் தளிர்த்தார் என்க. வீரர்களது மகிழ்ச்சிக்கு, தாய்ப் பறவையின் வருகை கண்டு மகிழும் பறவைக் குஞ்சுகளின் உவகை உவமையாக்கப்பட்டுள்ளது. பொம்மல் - மகிழ்ச்சி; நீளம் - கூடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bursting with joy that the mission of going and returning was achieved,
  2. the victorious monkey heroes, who had stood lamenting in fear,
  3. flourished with delight like fledglings in a nest
  4. who see their mother come swooping home.

What the poem says

The monkey heroes, who had been anxious and lamenting while they waited, are overjoyed that the search is complete. They are like nestlings who see their mother bird flying back to the nest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōy varum karumam muṟṟiṟṟu eṉpatu ōr pommal poṅka,
vām verīi niṉṟa veṉṟi vāṉara vīrar, maṉṉō
pāyvaru nīḷattu āṅkaṇ iruntaṉa; paṟavaip pārpput
tāy varak kaṇṭataṉṉa uvakaiyiṉ, taḷirttār ammā.