கம்பராமாயணம் 6012 · சுந்தர 15.4

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலவர் அழுதனர் (அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்) சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; சிலவர் முன் நின்று ஆர்த்தனர் - சிலர் அனுமனுக்கு முன்னாலே நின்று ஆரவாரித்தார்கள்; சிலவர் அண்மி தொழுதனர் - சிலர், (அனுமனை) நெருங்கி வணங்கினார்கள்; சிலவர் ஆடி துள்ளினர் - சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; சிலவர் அள்ளி முழுது உற விழுங்குவார் போல் மொய்த்தனர் - சிலர் ( அனுமனை) எடுத்து முழுவதும் விழுங்குபவர் போன்று (அவனை நெருங்கிச் சூழ்ந்து கொண்டனர்; சிலவர் சுற்றும் தழுவினர் - சிலர் சுற்றிலும் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்; சிலவர் தாங்கிக் கொண்டு சுமந்தனர் - சிலர் அனுமனைத் தாங்கித் தூக்கிச் சுமந்து கொண்டார்கள்.

அனுமனைக் கண்டவானர வீரர்களின் மகிழ்ச்சிச் செயல்கள் கூறப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some wept; some stood before him and shouted; some drew near
  2. and bowed; some danced and leapt; some crowded round
  3. as if to scoop him up and swallow him whole; some embraced him all over;
  4. some lifted him and carried him.

What the poem says

A lively picture of the monkeys' joy at Aṉumaṉ's return: weeping, cheering, bowing, dancing, crowding round as if to swallow him, hugging him and carrying him on their shoulders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻutaṉar cilavar, muṉ niṉṟu ārttaṉar cilavar, aṇmit
toḻutaṉar cilavar, āṭit tuḷḷiṉar cilavar, aḷḷi
muḻutuṟa viḻuṅkuvār pōl moyttaṉar cilavar, muṟṟum
taḻuviṉar cilavar, koṇṭu cumantaṉar cilavar, tāṅki.