கம்பராமாயணம் 6013 · சுந்தர 15.5

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேனொடு கிழங்கும் காயும் நறியன, அரிதின் தேடி
மேல்முறை வைத்தோம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;
மான வாள் முகமே எங்கட்கு உரைத்தது, மாற்றம்; என்று,
தான் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார்.

பொருள் · Meaning in Tamil

சிலவர் - சில வானரவீரர்கள்; அண்ணல் மானம் வாள் முகமே நங்கட்கு மாற்றம் உரைத்தது - (அனுமனை நோக்கி) பெரியோய் ! பெருமையும் ஒளியும் பொருந்திய உன் முகமே எங்களுக்கு (பிராட்டியைக் கண்ட நற்செய்தியாகிய) சொற்களைத் தெரிவித்துவிட்டது; நறியன தேனொடு கிழங்கும் காயும் அரிதின் தேடி மேல் முறை வைத்தோம் - (ஆதலால்) நல்ல சுவையுள்ளனவான தேனையும் கிழங்குகளையும் காய்களையும் அருமையாகத் தேடிக் கொணர்ந்து முன்னமே ஒழுங்காக வைத்துள்ளோம், நுகர்ந்தனை மெலிவு தீர்தி என்று - நீ உண்டு, களைப்பைத் தீர்த்துக் கொள்வாயாக என்று சொல்லி, தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை தந்தார் - தாம் விரும்பி உண்ணக் கூடிய இலையுணவு முதலியவற்றை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Honey, roots and fruits, fine ones, searched out with care,
  2. we have laid ready; lord, eat and end your weariness;
  3. your proud bright face has already told us the news,' and saying this,
  4. some brought him in turn all the greens they themselves ate.

What the poem says

Some of the monkeys tell Aṉumaṉ that his radiant face has already told them the good news that he found Cītai. They offer him the honey, roots, fruit and leaves they have gathered for him and urge him to eat and rest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉoṭu kiḻaṅkum kāyum naṟiyaṉa, aritiṉ tēṭi
mēlmuṟai vaittōm; aṇṇal! nukarntaṉai, melivu tīrti;
māṉa vāḷ mukamē naṅkaṭku uraittatu, māṟṟam; eṉṟu,
tām nukar cākam ellām muṟaimuṟai cilavar tantār.