கம்பராமாயணம் 6014 · சுந்தர 15.6

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாள்களில் மார்பில் தோளில் தலைகளில் தடக்கை தம்மில்
வாள்களில் வேலில் வாளி மழைகளின் வகிர்ந்த புண்கள்,
நாள்கள்மேல் உலகில் சென்ற எண்ணன, நம்பி தன்னை
ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக உளைந்து உயிர்த்தார்.

பொருள் · Meaning in Tamil

தாள்களில்மார்பில் தோளில் தலையினில் தடக்கை தம்மில் - (அவ்வானரவீரர்கள்) அனுமனுடைய பாதங்களிலும், மார்பிலும், தோள்களிலும், தலையிலும், பெரிய கைகளிலும்; வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் - அரக்கர்களான பகைவர்களுடைய வாள்களாலும், வேல்களாலும், அம்பு மழைகளாலும், பிளந்து உண்டாக்கப்பட்ட காயங்கள்; உலகில் நாள்கள் மேல் சென்ற எண் என - உலகத்தில் நாள்கள் மேலே கழிந்த எண்கள் போல (அளவு கடந்தனவாய்) நம்பி தன்னை ஊழ் கொள நோக்கி நோக்கி - அனுமனிடத்து உள்ளனவற்றை முறைமை பொருந்த ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து; உயிர் உக உளைந்து உயிர்த்தார் - தம்உயிர் சிந்திப் போகுமாறு வருந்திப் பெருமூச்சுவிட்டார் அனுமன் உடலில்உள்ள புண்கள் அளவற்றன என்பதை, “நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என என்ற தொடர் காட்டுகின்றது. எண்ணற்றவையைக் குறிக்க “வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று' என்றதிருக்குறள் (22) தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On his feet, chest, shoulders, head and great hands,
  2. the wounds cut by swords, spears and rain of arrows,
  3. countless as the days gone by in the world, they looked at
  4. on the noble one again and again in turn, and sighed as if their lives would spill.

What the poem says

The monkeys examine Aṉumaṉ's body one wound at a time, cuts from swords, spears and showers of arrows on his feet, chest, shoulders, head and arms, as countless as all the days that have passed in the world, and they groan in distress. The phrase for countless numbers recalls a Tirukkuṟaḷ couplet (22) about counting the world's dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷkaḷil mārpil tōḷil talaiyiṉil taṭakkai tammil
vāḷkaḷiṉ vēliṉ vāḷi maḻaiyiṉiṉ vakirnta puṇkaḷ,
nāḷkaḷmēl ulakil ceṉṟa eṇ eṉa, nampi taṉṉai
ūḻ koḷa nōkki nōkki, uyir uka uḷaintu uyirttār.