கம்பராமாயணம் 6016 · சுந்தர 15.8

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர்; இறைஞ்சித் தாழ்ந்து
நின்றனர், உவகை பொங்க விம்மலர் நிமிர்ந்த நெஞ்சர்,
'சென்றது முதலா வந்தது இறுதியாச் செப்பல் பாலை
வன் திறல் உரவோய்!'என்னச் சொல்லுவான் மருத்து மைந்தன்.

பொருள் · Meaning in Tamil

என்றலும் - என்று(அனுமன்) கூறியவுடன்; எழுந்தனர் - (வானர வீரர்கள் அனைவரும்) எழுந்து நின்றவர்களாய்; கரங்கள் கூப்பி இறைஞ்சி தாழ்ந்து நின்றனர் - தம் கைகளைக் குவித்து, வணங்கித் தாழ்ந்துநின்று; உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் - மகிழ்ச்சி மேலிட பூரிப்பால் நிமிர்ந்து (ஊக்கம் கொண்ட) மன முடையவர்களாய்; வல் திறல் உரவோய் ! - (அனுமனை நோக்கி) மிக்க வலிமை உடையவனே !; சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல் பாலை என்ன - நீ இங்கிருந்து போனது முதலாக, இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தது முடிவாக, (நடந்ததை) இங்குச் சொல்வாயாக என்று கேட்டுக் கொள்ள; மருத்தின் மைந்தன் சொல்லுவான் - வாயு தேவனின் மகனான அனுமன் (பின்வரு மாறு) சொல்லுவானாயினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, they rose with joined hands, bowed low
  2. and stood, hearts swelling with surging joy:
  3. 'From your going to your return, tell us everything,
  4. hero of mighty strength!' and the son of the Wind spoke.

What the poem says

At the news of Cītai's blessing the monkeys stand with folded hands, bow low and, full of joy, ask Aṉumaṉ to tell them everything from his departure to his return. He begins his account.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum karaṅkaḷ kūppi eḻuntaṉar; iṟaiñcit tāḻntu
niṉṟaṉar, uvakai poṅka vimmalāl nimirnta neñcar,
'ceṉṟatu mutalā vantatu iṟutiyāc ceppaṟ pālai
vaṉ tiṟal uravōy!'eṉṉa colluvāṉ maruttiṉ maintaṉ.