கம்பராமாயணம் 6017 · சுந்தர 15.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்தகை - ஆண்மைக்குணம் நிறைந்த அனுமன்; தேவி உள்ளத்து அருந்தவம் - பிராட்டியின் மனத்தில் உள்ள அரிய தவமாகிய கற்பொழுக்கத்தை; அமைய சொல்லி - (அவர்களுக்கு விளங்கும்படித்) தெளிவாகச் சொல்லி; பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று - (பிராட்டி) அணிந்திருந்த (சூடாமணியாகிய) பெரிய அடையாளத்தைக் கையில் பெற்று வந்ததையும் சொல்லி; தன் வென்றியை தான் உரைப்ப வெள்கி - தனது வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல வெட்கப்பட்டு; போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் - யுத்தத்தில் நெடிய வாள்களை உடைய அரக்கர்களுடன் நடந்த செய்தியையும்; நெருப்பு சிந்தி மீண்டதும் - (இலங்கை முழுவதிலும் நெருப்பைவைத்து விட்டுமீண்டு வந்த செய்தியையும், விளம்பான் - சொல்லாமல் விட்டு விட்டான்.
தற்புகழ்ச்சிசெய்தல் மேன்மைக்கு இழுக்காம் ஆதலால், அரக்கரோடு நிகழ்ந்த போர்ச் செய்தியையும், இலங்கையில் நெருப்பு வைத்ததையும் அனுமன் சொல்லவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The manly one told fittingly of the hard penance in the queen's heart,
- told how he had received the great token she wore, but of what passed in battle
- with the long-sworded demons, and how he scattered fire
- and came back, he said nothing, ashamed to tell of his own victory.
What the poem says
Aṉumaṉ tells the monkeys about Cītai's steadfast chastity, which is a kind of austerity in her heart, and shows the jewel she gave him as a token for Irāmaṉ. Out of modesty he says nothing of his battles with the demons or the burning of Ilaṅkai, since praising oneself is unworthy of the great.