கம்பராமாயணம் 6018 · சுந்தர 15.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொருதமை புண்ணேசொல்ல - (வானர வீரர்கள்அனுமனை நோக்கி, நீ சொல்லாவிட்டாலும்) நீ அங்குப் போர் புரிந்ததை உன் உடம்பில் உள்ளகாயங்களே தெரிவிக்கவும்; வென்றமை போந்த தன்மை உரை செய - நீபகைவரை வென்ற தன்மையை நீ இங்கு திரும்பி வந்த நிலையே சொல்லவும்; ஊர் தீ இட்டது ஓங்கு இரும்புகையே ஓத - இலங்கை நகரில் நீ நெருப்புவைத்ததை உயர்ந்து ஓங்கிய பெரிய புகையே அறிவிக்கவும்; கருதலர்பெருமை - அப் பகைவர்களது வலிமை முதலிய சிறப்புகளை; தேவிமீண்டிலா செயலே காட்ட - பிராட்டி உன்னோடு திரும்பி வராத செயலேஎடுத்துக்காட்டவும்; தெரிதர உணர்ந்தோம் - தெளிவாக அறிந்து கொண்டோம்; பின்னர் இனி என் செய்தும் என்றார் - இனிமேல், என்ன செய்யக் கடவோம் என்று வினாவினார்கள். வானர வீரர்உணர்ந்த வகை அனுமான அளவை எனப்படும் - அனுமானம் - காரியத்தால் காரணம் அறிதல். கருதலர் - நன்மையை எண்ணாதவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His wounds told that he had fought; the way he came back
- told that he had won; the great towering smoke told that he had set the city on fire;
- her not returning showed the might of the foes;
- we have understood it clearly; what shall we do next?' they said.
What the poem says
The monkeys reply that Aṉumaṉ need not boast: his wounds show he fought, his safe return shows he won, the vast smoke on the horizon shows he burned the city, and the fact that Cītai did not come back with him shows how strong the enemy is. They ask what they should do now. The commentary notes this is inference, knowing a cause from its effects.