கம்பராமாயணம் 6019 · சுந்தர 15.11

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யாவதும் இனி வேறு எண்ண வேண்டுவது, இறையும் இல்லை;
சேவகன் தேவி தன்னைக் கண்டது விரைவின் செப்பி,
ஆவது அவ் அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம்;
போவது புலமை என்னாப் பொருக்கென எழுந்து போனார்.

பொருள் · Meaning in Tamil

இனி வேறு எண்ணல்வேண்டுவது யாவதும் இறையும் இல்லை - இனிமேல், வேறு எண்ணிப் பார்க்க வேண்டியது, எதுவும் சிறிதும் இல்லை; ஆவது சேவகன் தேவிதன்னை கண்டமை விரைவின் செப்பி - இனி நாம் செய்யத்தக்கது மகாவீரனான இராமபிரானுடைய மனைவியாகிய சீதையைப் பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; அவ் அண்ணல் - அந்த இராமபிரானது, ; உள்ளத்து அருந்துயர் ஆற்றலே ஆம் - மனத்தில் உள்ள, போக்குதற்கு அரிய துன்பத்தைத் தணியச் செய்தலே ஆகும்; போவதே புலமை என்னா - (அதற்காக இனி இராமபிரானிடம்) செல்வதே அறிவுள்ள செயலாகும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தினராய்க் கூறி; பொருக் கென எழுந்து போனார்- விரைவில் எழுந்து சென்றனர்.

இது, எல்லா வானரவீரரும் ஒரு சேரத் தீர்மானித்துச் சென்ற செயலைக் கூறுவதாகும். பொருக்கென விரைவுக் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'There is nothing more at all to think over now;
  2. to tell the hero quickly that the queen has been found
  3. and to ease the bitter grief in that lord's heart is what must be done;
  4. to go is wisdom,' they said, and rose at once and went.

What the poem says

The monkeys agree together that there is nothing left to debate. The wise course is to go at once and tell Irāmaṉ that Cītai has been found, to ease the grief in his heart. They set off immediately.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāvatum iṉi vēṟu eṇṇal vēṇṭuvatu, iṟaiyum illai;
cēvakaṉ tēvi taṉṉaik kaṇṭamai viraiviṉ ceppi,
āvatu av aṇṇal uḷḷattu arun tuyar āṟṟalē ām;
pōvatu pulamai eṉṉāp porukkeṉa eḻuntu pōṉār.