கம்பராமாயணம் 6034a · சுந்தர 15.26a

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அளியம் எம்மைசாதல் தீர்த்து அளித்த வீர ! - உம்மால் அன்பு செய்யத்தக்கவராகிய எங்களை இறந்து போதலினின்றும் நீக்கிக் காத்தருளிய பெரிய வீரனே !; ஏத நாள் - பிராட்டியைத் தேடி வரும் காரணமாய்க் குறிப்பிட்ட நாட்கள்; இறந்த - கடந்து போயின; இருந்த சேனை சால வருந்தினது - உம் வரவை எதிர் நோக்கி இங்கு தங்கியிருந்த சேனை, மிகவும் துயரம் மேற் கொண்டது; விரைவின் செல்லல் ஆவது அன்று ஆதலால் -வேகமாகச் செல்லும்வலிமை உடையது அல்ல ! ஆகையால்; தலைமகன் மெலிவு தீர நீ முன்னர் போது என்றார் - தலைவனான இராமபிரானது துன்பம் நீங்க, நீ முன்னதாக, அப்பெருமானிடம் போவாயாக என்று வானர வீரர் கூறினார்கள்; நன்று என அனுமன் போனான் - 'நல்லது' என்று சொல்லிவிட்டு இராமபிரான் இருக்கும் இடம் நோக்கி அனுமன் சென்றான்.

ஏத நாள்-பிராட்டியைத் தேடி வரும் காரணமாகக் குறிக்கப்பட்ட நாள்; அது ஒரு மாதத் தவணை; “ஒரு மதி முற்றுறாத முன் முற்றுதிர்' (கம்ப. 4457) குறிப்பிட்ட நாள் கடந்தமையால், தமது அரசன் சுக்கிரீவன் தண்டிப்பானே என்பது, சேனையின் வருத்தம். சாதல் தீர்த்து அளித்தல் - சேனை சாகத் துணிந்தது. “மாண்டுறுவது நலம் என வலித் தனம்”. (கம்ப. 4658) அனுமன், இராமபிரானிடம் விரைவில் செல்ல வேண்டியதைக் காரணத்துடன் வானர வீரர்கள் கூறியதைத் தெரிவிப்பது இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The appointed days have passed; the army that stayed here has suffered greatly;
  2. so it is not able to go quickly; hero who rescued us,
  3. the pitiable, from death, so that the chief's grief may end,
  4. go on ahead of us,' they said; 'Good,' said Aṉumaṉ, and went.

What the poem says

The monkeys urge Aṉumaṉ to go ahead to Irāmaṉ. The month allowed for the search has run out, the army is worn out with grief and cannot travel fast, and Irāmaṉ's anguish must be relieved quickly. They call Aṉumaṉ the hero who saved their lives, since they had resolved to starve themselves to death if the search failed. He agrees and goes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ēta nāḷ iṟanta; cāla varuntiṉatu irunta cēṉai;
ātalāl viraiviṉ cellal āvatu aṉṟu; aḷiyam emmaic
cātal tīrttu aḷitta vīra! talaimakaṉ melivu tīrap
pōtu nī muṉṉar" eṉṟār; "naṉṟu" eṉa aṉumaṉ pōṉāṉ.