கம்பராமாயணம் 6035 · சுந்தர 15.27

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முத்தலை எஃகினாற்கும் முடிப்ப அரும் கருமம் முற்றி,
வித்தகத் தூதன் மீண்டது இறுதியா விளைந்த தன்மை,
அத்தலை அறிந்தது எல்லாம் அறைந்தனம்; ஆழியான் மாட்டு
இத்தலை நிகழ்ந்தது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம்.

பொருள் · Meaning in Tamil

வித்தகத் தூதன்- சதுரப்பாடுடைய தூதனாகிய அனுமன்; முத்தலை எஃகினாற்கும் - மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும், முடிப்ப அரும் கருமம் முற்றி - செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி; மீண்டது இறுதியாய் - திரும்பி வந்தது முடிவாக; அத்தலை விளைந்த தன்மை அறிந்த எல்லாம் அறைந்தனம் - அங்கு நிகழ்ந்த செயல்களை தெரிந்த வரையிலும், சொன்னோம்; இத்தலை ஆழியான் மாட்டு நிகழ்ந்த எல்லாம் - இனி, இவ்விடத்தில் (கிட்கிந்தையில்) இராமபிரானிடத்தில் நடந்தனவற்றை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டாம் - சொல்வதற்குத் தொடங்கினோம்.

இக்கவிதை, கவிக் கூற்று, முத்தலை எஃகினாற்கும் முடிப்பரும் கருமம்:- இலங்கையை எரியூட்டுதல். செயற்கரும் காரியம் செய்தமையால் அனுமன்வித்தகத்தூதன் எனப்பட்டான். வித்தகம் - திறமை. (சதுரப்பாடு)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Accomplishing a task hard even for the one with the three-pronged spear,
  2. the skilled envoy returned: how it all came about up to that end,
  3. all that is known of that place, we have told; now all that happened here
  4. with the Lord of the discus we begin to tell.

What the poem says

The poet speaks in his own voice. He has told everything that happened in Ilaṅkai up to the return of Aṉumaṉ, the clever envoy, who achieved a task, the burning of the city, that would tax even Civaṉ. Now he turns to what was happening meanwhile with Irāmaṉ, here called the bearer of the discus, Tirumāl's weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muttalai eḵkiṉāṟkum muṭippa aruṅ karumam muṟṟi,
vittakat tūtaṉ mīṇṭatu iṟutiyāy viḷainta taṉmai,
attalai aṟinta ellām aṟaintaṉam; āḻiyāṉ māṭṭu
ittalai nikaḻnta ellām iyampuvāṉ eṭuttuk koṇṭām.