கம்பராமாயணம் 6037 · சுந்தர 15.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செங்கணான்சோர்தொறும் சோர்தொறும் - சிவந்த கண்களை உடையவனான இராமபிரான் (பிராட்டியின் பிரிவாற்றாமையால்) உயிர் நீங்கினான் போன்று மூர்ச்சிக்கும் போதெல்லாம்; கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் - மேகம் தங்கியுள்ள மலையில் இருந்தவனாகிய சூரியன் மகனான சுக்கிரீவன்; சீரிய மொழிகளால் தெருட்ட - சிறந்த மொழிகளைக் கூறித் தேற்ற, (அதனால்); ஆயிரம் ஆர் உயிர் உடையன் ஆம் என - (இராமபிரான்) பல அரிய உயிர்களை உடையவன் போல; உயிர்த்து தோன்றினான் - ஓய்ந்து மீண்டும் உயிர் பெற்றவன் போல (பலமுறை) மூச்சு விட்டுக் காணப் பெற்றான்.
பிராட்டியின்பிரிவுத் துயரம் வாட்டுதலினால், மூர்ச்சித்து உயிர் சோர்ந்த இராமபிரானை சுக்கிரீவன், தனது நல்ல சொற்களால் தெளிவித்தான். அதனால் இராமபிரான் உயிர்த்துத் தோன்றினான் என்பதாம். இராமபிரான், உயிர் அடங்கியும், மீண்டு வந்தும், பலமுறை நிகழப் பெற்றவனாதலால், “ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம்” எனப்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the son of the Sun, staying on the cloud-capped hill,
- consoled him with fine words, the red-eyed one,
- as if he had a thousand precious lives,
- each time he fainted and fainted again, breathed and revived.
What the poem says
Back in Kiṭkintai, Irāmaṉ, overcome by grief at Cītai's absence, faints again and again, and each time Cukkirīvaṉ revives him with comforting words. Because he seems to die and return to life so many times, the poet says he must have had a thousand lives.