கம்பராமாயணம் 6039 · சுந்தர 15.31

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆரியன் அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன்
'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம் பழியொடு முடிந்தது ஆம்'எனச்
சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லினான்.

பொருள் · Meaning in Tamil

ஆரியன் அரும்துயர்க் கடலுள் ஆழ்பவன் - பெருமைக்குரியவனான இராமபிரான், அரிய துன்பமாகிய கடலுள் மூழ்குபவனாய்; சூரியன் புதல்வனை நோக்கி - சூரியனின் மகனாகிய சுக்கிரீவனைப் பார்த்து; நம் செய்கை சீரியது அன்று - நாம் மேற்கொண்ட காரியம் பயன்பட்டதாக அமையவில்லை; தீர்வு அரும் மூரி வெம் பழி யொடும் முடிந்தது ஆம் என சொல்லுவான் - தீராத பெரிய பழிச் சொல்லோடும் முடிந்ததாகும் என்று, பின்வருமாறு எடுத்துக் கூறுபவனானான்.

நம் செய்கை; இதுவரை பிராட்டியைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சி. மூரி வெம்பழி; தன் மனையாளை, தீயோன் ஒருவன் எடுத்துச் செல்ல, இராமன் அவளை மீட்கும் ஆற்றல் அற்றவனானான் என்று உலகத்தார் கூறுவது. இந்தக் கவியில் தொகுத்துக் காட்டப்பட்ட செய்கை. பழி ஆகியவைகள் அடுத்த நான்கு கவிகளில் வகுத்துக் காட்டப்படுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, sinking in a sea of bitter grief,
  2. said, 'What we have done has not turned out well; it has ended
  3. with a mighty cruel blame that can never be removed,'
  4. and looking at the son of the Sun, he spoke.

What the poem says

Despairing, Irāmaṉ tells Cukkirīvaṉ that their search has failed and that he will be left with an indelible disgrace: the world will say that he could not rescue his wife from the villain who carried her off. His lament is developed in the following verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyaṉ aruntuyark kaṭaluḷ āḻpavaṉ
'cīriyatu aṉṟu nam ceykai; tīrvu arum
mūri vem paḻiyoṭum muṭintatām'eṉa
cūriyaṉ putalvaṉai nōkkic colluvāṉ.