கம்பராமாயணம் 6040 · சுந்தர 15.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நற்பண்புடையவனே !; வெறிகரும் குழலியை தென் திசை நாடல் மேயினார் - நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய சீதையை தெற்குத் திசையில் தேடுதலை மேற்கொண்டு சென்ற அனுமன் முதலிய வானர வீரர்கள்; குறித்த நாள் இகந்தன குன்ற - நாம் குறிப்பிட்டுக் கூறிய தவணை நாட்கள் கடந்தன; நாள் கடந்து தேயவும்; இவண் மறித்து வந்திலர் - இங்கு திரும்பி வந்தாரல்லர்; அவர்க்கு - தேடச் சென்ற அவ்வானர வீரர்க்கு; பிறிது உற்றுளது என்னை ? - வேறு என்ன நேர்ந்துள்ளது ?; மாண்டுளார் கொலோ ? - இறந்து போயினார்களோ ?
குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்; மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான். “பிறிது” என்பது எதுகை நோக்கப் பிறித்து என நின்றது; செய்யுள் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The days we fixed have gone by; those who went to the southern quarter
- to search for her of the fragrant dark tresses
- have not turned back and come here. Could they have died?
- What else could have befallen them, O man of noble nature?
What the poem says
Irāmaṉ, waiting with Cukkirīvaṉ, grows anxious because the monkey party sent south to look for Cītai has overrun the time limit set for its return. He wonders aloud whether they have perished.
Addressing Cukkirīvaṉ as a man of good qualities, he begins a series of anxious guesses that run through the next few verses.