கம்பராமாயணம் 6041 · சுந்தர 15.33

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவள் மாண்டனள்- (அதுவன்றி) அச்சீதை இறந்து விட்டாள்; இவள் மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்கு உரைத்தலின் - “இந்த சீதா பிராட்டி இறந்த செய்தியைத் திரும்பிச் சென்று அந்த இராமபிரான் முதலியவர்களுக்குச் சொல்லுவதிலும்; விளிதல் நன்று எனா - நாம் இறந்து போதலே நல்லது' என்று எண்ணி; பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ? - மேற்கொண்டதொரு துன்பத்தினால் (அவ்வனுமன் முதலானோர் இறந்தார்களோ ?; இன்னமும் தேண்டினர் திரிகின்றார்களோ ? - (அன்றி) இன்னும், தேடினவர்களாய் வேறுபல இடங்களிலும் அலைகின்றார்களோ ?.

இராமபிரான் ஐயப்பாடு, மேலும் நீளுகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, She is dead, and better to die ourselves than go back
  2. and tell them the news of her death,
  3. have they perished under the grief they took upon themselves?
  4. Or are they still wandering about, searching?

What the poem says

Irāmaṉ's doubts continue. Perhaps the searchers found that Cītai was dead and, unwilling to carry such news back to him, chose to die rather than return. Or perhaps they have simply not given up and are still roaming from place to place looking for her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṇṭaṉaḷ avaḷ;'ivaḷ māṇṭa vārttaiyai
mīṇṭu avarkku uraittaliṉ viḷital naṉṟu'; eṉā
pūṇṭatu ōr tuyar koṭu poṉṟiṉār kolō?
tēṇṭiṉar iṉṉamum tirikiṉṟār kolō?'.