கம்பராமாயணம் 6042 · சுந்தர 15.34

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கண்டனர் அரக்கரைக் கறுவு கைம் மிக
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண் தலம் அதனில் மேவினர்கொல்? வேறு இலாத்
தண்டல் இல் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ.'

பொருள் · Meaning in Tamil

அரக்கரைக்கண்டனர் - (சீதையை எடுத்துச்சென்ற இராவணன் முதலிய) அரக்கர்களைப் பார்த்து; கறுவு கைம்மிக மண்டு அமர் தொடங்கினார் - கோபம் அதிகரிக்க, மிகுதியான போரைச் செய்யத் தொடங்கி; வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில் மேயினார் கொல் ? - வஞ்சகச் செயலுடைய அவ்வரக்கர்களின் மாயச் செயலால் (இறந்து) வீரசுவர்க்கத்தில் சென்று சேர்ந்தார்களோ ?; தண்டல் இல் நெடுஞ் சிறை தளைப்பட்டார் கொலோ ? - (எக்காலத்திலும்) நீங்குதல் இல்லாத பெரிய சிறையில் கட்டுப்பட்டார்களோ ?

ஓ: அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Did they see the demons and, their fury swelling,
  2. begin a fierce battle, and through the sorcery of those deceivers
  3. go up to the world of heaven? Or have they been bound
  4. in a long, inescapable prison from which there is no release?

What the poem says

Another fear: the monkeys may have met Irāvaṇaṉ's demons, fought them in anger, and been killed by demonic magic, rising to the heaven reserved for warriors who fall in battle. Or they may have been captured and locked away for good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṭaṉar arakkaraik kaṟuvu kaim mika
maṇṭu amar toṭaṅkiṉār vañcar māyaiyāl
viṇ talam ataṉil mēyiṉarkol? vēṟu ilāt
taṇṭal il neṭuñciṟait taḷaippaṭṭār kolō.'