கம்பராமாயணம் 6043 · சுந்தர 15.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூறின நாள் அவர்இருக்கை கூடலம் - (நமக்குத் தவணையாகக் குறிப்பிட்டுச் சொன்ன நாட்களுள் இராமன் முதலியோர் இருப்பிடத்தைச் சேர்ந்தோமில்லை; ஏறல் அஞ்சுதும் என - இனி அங்கு சென்று சேரும் செயலுக்குப் பயப்படுகின்றோம் என்று தீர்மானித்து; இன்ப துன்பங்கள் ஆறினர் - இன்ப துன்ப உணர்ச்சிகளினின்றும் நீங்கியவர்களாய்; அருந்தவம் அயர்கின்றார் கொலோ - அரிய தவத்தில் ஈடுபட்டு மற்றவற்றை மறந்தார்களோ ?; அவர்க்கு வேறு உற்றது என் ? - அந்த வீரர்களுக்கு வேறே நேர்ந்தது யாதோ ?; விளம்புவாய் என்றான் - 'சொல்வாயாக' என்று (இராமபிரான் சுக்கிரீவனைப்) பார்த்துக் கேட்டான்.
குறித்த காலம் கடந்ததனால், மீண்டும் இராமன் இருக்கும் இடத்துக்கு வருதற்கு அஞ்ச, வானர வீரர்கள் தவத்தை மேற்கொண்டனரோ என்பதும் இராமபிரான் உள்ளத்தெழுந்த ஒரு ஐயம் ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying, We did not reach his dwelling within the days that were set;
- we fear to go back there now, have they put away
- both joy and sorrow and given themselves to hard austerity?
- What else has happened to them? Tell me, he said.
What the poem says
Irāmaṉ's last guess is that the searchers, ashamed at missing the deadline and afraid to face him, have renounced the world and taken up asceticism. He ends by asking Cukkirīvaṉ directly what he thinks has become of them.
At this point news arrives, as the following verses tell.