கம்பராமாயணம் 6062 · சுந்தர 15.54

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென் புலத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக்கை அப் பொரு இல் வீரனும்
அன்பு உறு சிந்தையன்; அமைய நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

என் புழி- என்று(இவ்வாறு இராமபிரான் சுக்கிரீவனை நோக்கி) வினாவிய காலத்தில்; அனுமனும் -; இரவி என்பவன் தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் - சூரியன் தெற்குத் திசையில் தோன்றியுள்ளான் போல (அவர் கண்களில்) காணப்பட்டான்; பொன் பொழி தட கை அ பொரு இல் வீரனும் - அழகு ததும்பி வழியும் பெரிய கைகளை உடைய ஒப்பற்ற வீரனான அந்த இராமபிரானும்; அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் - அன்பு மிக்க மனத்தை உடையவனாய் நன்றாகப் பார்த்தான்.

அனுமனைச்சூரியனாகவும், அவன் தென் திசையிலிருந்து வருவதால், சூரியன் தெற்கிலிருந்து வருவதாகவும் கூறப்பெற்றது. கிழக்கிலிருந்து வரவேண்டிய சூரியன், இப்போது தெற்குத் திக்கிலிருந்து வருகின்றான் என்று நயம் படக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he was saying this, Aṉumaṉ too came into view
  2. as though the sun had appeared in the south;
  3. and that peerless hero whose great hands pour out gold
  4. looked at him intently, his heart full of love.

What the poem says

Just as Irāmaṉ is questioning Cukkirīvaṉ, Aṉumaṉ appears, shining like a sun rising in the south instead of the east, since he comes from the southern direction. Irāmaṉ, the generous hero, watches him approach with deep affection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpuḻi aṉumaṉum iravi eṉpavaṉ
teṉ puṟattu uḷaṉ eṉat terivatu āyiṉāṉ;
poṉ poḻi taṭakkai ap poru il vīraṉum
aṉpuṟu cintaiyaṉ; amaiya nōkkiṉāṉ.