கம்பராமாயணம் 6065 · சுந்தர 15.57

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆங்கு அவன் செய்கையை அளவை ஆம் எனா
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்; புனல் மலர்க்கண் விம்மின;
நீங்கினது அருந்துயர்; காதல் நீண்டதே.

பொருள் · Meaning in Tamil

ஆங்கு அவன்செய்கையே - (இராமபிரான் அவ்விடத்தில் அனுமன் செய்த குறிப்பான செயலே; அளவை ஆம் எனா - பிராட்டியின் நன்னிலையை அறிந்து கொள்வதற்கு அளவு கருவியாகும் என்று; ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் - சிறந்த (தனது குறிப்பறியவல்ல) அறிவினால் அங்கு நடந்த செய்திகளை நுட்பமாய் அறிந்து கொண்டான்; தோள் வீங்கின - அந்த மகிழ்ச்சியினால், பெருமானது தோள்கள் பூரித்தன; மலர்க்கண்கள் விம்மின - தாமரை மலர் போன்ற கண்கள் ஆனந்த நீர் பெருகப் பெற்றன; அருந்துயர் நீங்கியது - அவனது நீங்குதற்கு அருமையான துன்பமும் நீங்கிற்று; காதல் நீண்டது - பிராட்டிபால் கொண்ட அன்பும் வளர்வதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking that act of his, done there, as proof enough,
  2. he grasped with his lofty understanding all that had come about;
  3. his shoulders swelled; his flower-like eyes brimmed;
  4. his grievous sorrow left him; his love grew greater.

What the poem says

Treating Aṉumaṉ's gesture as a sure measure of the truth, Irāmaṉ grasps everything that has happened. His shoulders swell with joy, his lotus eyes fill with happy tears, his long grief lifts, and his love for Cītai deepens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku avaṉ ceykaiyē aḷavai ām eṉā
ōṅkiya uṇarviṉāl viḷaintatu uṉṉiṉāṉ;
vīṅkiṉa tōḷ; malarkkaṇkaḷ vimmiṉa;
nīṅkiyatu aruntuyar; kātal nīṇṭatē.