கம்பராமாயணம் 6064 · சுந்தர 15.56

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திண் திறலவன் செயல் தெரிய நோக்கினான்;
வண்டு இயல் ஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று; எனக்
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்.

பொருள் · Meaning in Tamil

குறிப்பினால்உணரும் கொள்கையான் - அவயவங்களின்குறிப்பைக் கொண்டு நடந்ததை நன்கு உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவினனான இராமபிரான்; திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் - மிக்க வலிமை உடைய அந்த அனுமனது செய்கையை நன்றாகப் பார்த்து அறிந்து; வண்டு உறை ஓதியும் வலியள் - வண்டுகள் தங்கும் கூந்தலை உடைய பிராட்டியும் நன்னிலையில் உறுதியுடன் இருக்கின்றாள்; இவன் கண்டதும் உண்டு - இவ்வனுமன் அவளை நேரில் பார்த்து வந்ததும் உண்டு; அவள் கற்பும் நன்று என கொண்டனன் - அவளது கற்பும் சிறப்புடையதாயிருக்கின்றது என்று ஊகித்துக் கொண்டான். அனுமன் தென் திசைநோக்கித் தொழுத செய்கையிலிருந்து, இராமபிரான்உணர்ந்து கொண்ட பிராட்டியின் நிலை பற்றிப் பேசப்பட்டது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He watched closely what that mighty one was doing:
  2. she whose hair is the haunt of bees is strong and safe; and this one
  3. has indeed seen her; and her chastity is unharmed, so
  4. he concluded, he whose way it is to understand from signs.

What the poem says

Irāmaṉ, skilled at reading meaning from gestures, understands Aṉumaṉ's southward prostration: Cītai is alive and firm, Aṉumaṉ has seen her with his own eyes, and her virtue is intact.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṇ tiṟal avaṉ ceyal teriya nōkkiṉāṉ;
vaṇṭu uṟai ōtiyum valiyaḷ; maṟṟu ivaṉ
kaṇṭatum uṇṭu; avaḷ kaṟpum naṉṟu; eṉak
koṇṭaṉaṉ kuṟippiṉāl uṇarum koḷkaiyāṉ.