கம்பராமாயணம் 6071 · சுந்தர 15.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீ, தையல்கண்ணினும் உளை - நீ, பிராட்டியின்கண்களிலும் எப்பொழுதும் நீங்காது இருக்கின்றாய்; கருத்தினும் நீ உளை - அவள் மனத்திலும் நீ தங்கியிருக்கின்றாய்; வாயின் எண்ணினும் நீ உளை - அவள் வாயினின்றும் தோன்றும் ஒவ்வொரு சொற்களிலும் நீ இருக்கின்றாய்; கொங்கை இணைக்குவை தன்னில் அண்ணல்வெம் காமன் ஓவாது எய்த - இரண்டு தனங்களின் முகட்டிலும், பெருமையும் கொடுமையும் உடைய மன்மதன் இடைவிடாமல் ஏவிய மலரம்புகள் தைத்து ஊடுருவிய ஆறாத புண்களிலும் நீ தங்கியிருக்கின்றாய்; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ ? - (ஆதலால்) உன்னைப் பிரிந்திருக்கின்றாள் என்பது பொருத்தமான செய்தி ஆகுமோ? (ஆகாது)
பிராட்டி, மனம், மொழி, மெய் என்ற கரணங்களாலும் இராமபிரானைப் பிரியாது இருக்கிறாள் என்பது கருத்து. கண்களில் இருத்தல் உரு வெளித் தோற்றம், வாயின் எண்ணின் இருத்தல் இராமநாமம் கூறுதல். கொங்கை... புண்ணில் இருத்தல் இராமனைத் தழுவும் பாவனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You are in her eyes; you are in the lady's mind; you are
- in every word her lips speak; and in the unhealing wounds
- pierced without pause into her twin breasts
- by the flower arrows of the great, cruel god of love, you are there too; can it be right to say she is parted from you?
What the poem says
Aṉumaṉ assures Irāmaṉ that Cītai has never really been separated from him: he is present in her eyes as a vision, in her mind, in her speech as she repeats his name, and in the love-wounds on her breast as she imagines embracing him. In thought, word and body she remains with him.