கம்பராமாயணம் 6072 · சுந்தர 15.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய ! - ஐயனே !; தவம்செய்த தவம் ஆம் தையல் - தவம் என்பதுசெய்த தவத்தின் வடிவமாகிய பிராட்டி; வேலையுள் - கடலினிடையில் உள்ள; இலங்கை என்னும் - இலங்கை என்னும் பெரிய நகரின் ஒரு புறத்தில்; விரிநகர் ஒரு சார் - நகரின் ஒரு புறத்தில்; விண் தோய் காலையும் மாலைதானும் இல்லது கனக கற்ப ஓர் சோலை அங்கு அதனில்- ஆகாயத்தைஅளாவி வளர்ந்த, காலை, மாலை என்ற வேறுபாடு இன்றி ஒரே விதமாகவிளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடைய ஒரு பூஞ்சோலையின் உள்ளே; உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் - உன்தம்பி, புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த அதே பரிசுத்தமானபர்ணசாலையில் தங்கியிருந்தாள்.
பிராட்டி, இராவணனால் தொடப்படாத கற்புடையவளாக இருக்கின்றாள் என்பது தெரிவிக்கப்பட்டது. பொன் மயமான கற்பகத் தருக்கள் ஒளிவீசுவதால், பகல் இருள் என்ற வேறுபாடு இல்லை சோலையில். அன்றி, மரங்களின் அடர்த்தியால், சூரிய ஒளி புகாத சோலை என்றும், கொள்ளலாம். “தவம் செய்த தவம் ஆம் தையல்” என்பது பிராட்டியின் கற்புத் தவத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In one corner of the wide city called Ilaṅkai, in the midst of the sea,
- there is a grove, touching the sky, that knows neither morning nor evening,
- of golden wishing-trees; and there, in a pure hut
- thatched with grass, the very one your brother built, she stayed, sire, the lady who is austerity's own austerity.
What the poem says
Aṉumaṉ describes where Cītai is held: a grove of golden wishing-trees so radiant, or so dense, that day and night are alike there. She lives in the very grass hut Ilakkuvaṉ built for her in the forest, which Irāvaṇaṉ carried off with her.
That she remains in that pure hut shows Irāvaṇaṉ has never touched her. She is called the austerity of austerity itself, the embodiment of chaste penance.