கம்பராமாயணம் 6074 · சுந்தர 15.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீண்டிலன்என்னும் வாய்மை - பிராட்டியை இராவணன் தொட்டானில்லை என்ற உண்மையை; திசை முகன் செய்தமுட்டை கீண்டிலது - பிரமன்படைத்த உலகம், பிளந்து போகவில்லை; அனந்தன் உச்சி கிழிந்திலது - ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம் கிழிந்து போகவில்லை; வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி மேல் வந்தனவில்லை; சுடர்கள் யாவும் விழுந்தில - சூரியன் சந்திரன் முதலிய ஒளியுள்ள நட்சத்திரங்கள் யாவும் கீழே விழுந்து அழியவில்லை; வேதம் செய்கை மாண்டிலது - வேதங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களும் அழிந்தனவல்ல; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி - என்கின்ற இத்தன்மை மெய்யாயிருத்தலை நோக்கி, (அதனால்) உணர்வாயாக.
'வாய்மை, வாய்மையால் உணர்தி' என இயையும், இராவணன் பிராட்டியைத் தீண்டிலன் என்னும் வாய்மை கடல்கள் எழுந்து பொங்காமை முதலியவற்றால் அறியக்கிடக்கும். பிராட்டியின் புனிதத் தன்மையால்தான், இயற்கை நிகழ்ச்சிகள் மாறுபடாமல் நிற்கின்றன என்று கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The truth that he did not touch her: the egg of the world the four-faced one made
- has not burst apart, Anantaṉ's head has not been torn, the seas
- have not risen and come back over the land, the lights have not all fallen, the Vedas and their rites
- have not perished; by this truth know it, O king.
What the poem says
Aṉumaṉ offers cosmic proof that Cītai is untouched: had Irāvaṇaṉ violated her, the universe would have collapsed. The cosmic egg made by Piramaṉ would have split, the hoods of the serpent Anantaṉ who holds up the earth would have torn, the oceans would have flooded the world, the sun, moon and stars would have fallen, and the Vedic order would have ended. The world stands because of her purity.