கம்பராமாயணம் 6077 · சுந்தர 15.69

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,
இரக்கம் என்று ஒன்று தானே ஏந்து இழை வடிவம் எய்தித்
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள்; அத் தமியள் அம்மா!

பொருள் · Meaning in Tamil

அளவு அற்றார்கள்அரக்கியர் - எண்ணி அளவிட்டுக்கூறமுடியாத அரக்கியர்கள்; அலகையின் குழுவும் அஞ்ச - பேய்களின் கூட்டமும் அஞ்சும்படி, நெருக்கினர் காப்ப - தப்பிப் போவதற்கு இடைவெளி விடாது, நெருங்கி நின்று காவல் புரிய; அச்சம் நின்பால் நேசமே நீக்க - அப்போது தனக்கு ஏற்பட்ட அச்சத்தை உன்னிடம் தான் கொண்டுள்ள அன்பின் மிகுதியே போக்க; அத் தமியள் - தனியளாகிய அப் பிராட்டி; இரக்கம் என்ற ஒன்றுதானே - இரக்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு குணமே; ஏந்திழை வடிவம் எய்தி - ஒரு பெண்ணின் உருவத்தைப் பெற்று; தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள்- கொடுமைமிக்க சிறையில் அடைபட்டிருப்பதைப் போன்ற தன்மை உடையவளாய் இருக்கின்றாள்.

பிராட்டி அசோகவனத்தில் இருந்த நிலை உணர்த்தப்பட்டது. “நின்பால் கொண்ட நேசமே, அச்சத்தை நீக்கினமையால், அரக்கியர் கொடுமைகட்குச் சினம் கொள்ளாமல், அவரிடம் இரக்கமே காட்டினாள் பிராட்டி ' என்று காரணம் காட்டிக் கூறினான் அனுமன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Demonesses beyond counting, packed so close that even hordes of ghouls would fear,
  2. guard her; with her love for you driving out fear,
  3. she is like compassion itself that has taken a woman's form
  4. and fallen into a prison of towering arrogance; so she is, all alone, ah!

What the poem says

Aṉumaṉ describes Cītai in the Acōka grove, surrounded by countless demon guards more frightening than ghosts. Her love for Irāmaṉ has driven out her fear, and she seems to be compassion incarnate held in a cruel prison: rather than rage at her tormentors, she shows them only pity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkiyar aḷavu aṟṟārkaḷ, alakaiyiṉ kuḻuvum añca
nerukkiṉar kāppa, niṉpāl nēyamē accam nīkka,
irakkam eṉṟa oṉṟu tāṉē ēntiḻai vaṭivam eytit
tarukku uyar ciṟai uṟṟaṉṉa takaiyaḷ; at tamiyaḷ ammā!