கம்பராமாயணம் 6078 · சுந்தர 15.70

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள் நுதல், நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களில் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே கண் அகன் ஞாலம் தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி; அன்றே.

பொருள் · Meaning in Tamil

கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன் கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய் என்று அனுமன் இராமனைப் பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the bright-browed one of chastity born of greatness and made perfect
  2. has gathered in her eyes the love for you, born long ago and grown complete,
  3. and keeps watching for you without end, you alone, in this wide-spaced world,
  4. have enjoyed the wealth that comes of being born a man; is it not so?

What the poem says

An additional verse. Aṉumaṉ congratulates Irāmaṉ: a woman of perfect chastity has gathered all her lifelong love for him into her eyes and waits only to see him. To be loved like that is the true wealth of a man's life, and in all the world Irāmaṉ alone possesses it in full.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇpiṟantu amainta kaṟpiṉ vāṇutal, niṉpāl vaitta
cēṇ piṟantu amainta kātal kaṇkaḷiṉ teviṭṭi, tīrāk
kāṇ piṟantamaiyāl, nīyē kaṇ akaṉ ñālam taṉṉuḷ
āṇ piṟantu amainta celvam uṇṭaṉai yāti; aṉṟē.