கம்பராமாயணம் 6080 · சுந்தர 15.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய ! - ஐயனே !; தையலை வணங்கற்கு ஒத்த - பிராட்டியை, நான் எதிர் சென்று வணங்குவதற்குத் தகுதியான; இடை பெறும் தன்மை நோக்கி - சமயத்தைப் பெறும் நிலையை எதிர்பார்த்து; யான் இருந்த காலை - நான் இருந்த பொழுது; அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்- மாலை அணிந்த வேற்படை ஏந்திய இலங்கை மன்னனாகிய இராவணன் அங்கு வந்து; இரந்து கூறி இறைஞ்சினன் - (தன்னை விரும்பும்படி) இரக்கத்தோடு பலவிதமான வார்த்தைகளைச் சொல்லி, பிராட்டியை வணங்கினான்; நங்கை இருந்து வெய்து உரை சொல்ல - பிராட்டி நில்லாது, இருந்து கொண்டே கடுமையான வார்த்தைகளைக் கூற, சீறி கோறல் மேற் கொண்டு விட்டான் - (அதைக் கேட்ட அவன்) கோபித்து, பிராட்டியைக் கொல்லத்தலைப்பட்டுவிட்டான்.
பிராட்டியின்கற்புத் திண்மையைத் தான் நேரில் காண்பதற்கு நிகழ்ந்த சந்தர்ப்பத்தை, இதன் மூலம் விளக்கினான் அனுமன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Watching for a moment fit to bow before the lady,
- I waited, sire; then the king of Ilaṅkai, with garlanded spear,
- arrived, spoke pleading words and bowed to her; the lady, staying seated,
- answered him with burning words, and he flew into rage and set about killing her.
What the poem says
Aṉumaṉ recounts what he witnessed while hiding in the grove, waiting for a chance to approach Cītai: Irāvaṇaṉ came, begged and bowed before her, and when she, without even rising, answered him with scorn, he became furious and moved to kill her. This let Aṉumaṉ see her steadfastness for himself.