கம்பராமாயணம் 6081 · சுந்தர 15.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய ! - ஐயனே!; ஆயிடை அணங்கின் கற்பும் - அப்பொழுது பிராட்டியின் கற்புத் திண்மையும்; நின் அருளும் செய்ய தூய நல் அறனும் - உனது அருளின் சிறப்பும் செம்மையும், தூய்மையும் நன்மையும் நிறைந்த அறமும்; என்று இனையன தொடர்ந்து காப்ப - என்று சொல்லத்தக்க இவைகள் எல்லாம் பிராட்டியின் உயிரை விடாமல் பாதுகாக்க; ஆங்கு - அப்பொழுது, (இராவணன்); அரக்கிமாரை- (அருகில் காவல் செய்து கொண்டிருக்கும்) அரக்கர்களை; பொதுவின் சொல்லுமின் - நன்மை விளைதலும் தீய பயத்தலுமான வார்த்தைகளைப் பொதுப் படக் கூறுங்கள்; என்று ஏயினன் - என்று கட்டளையிட்டு; போயினன் - விட்டுத் தன்னிடத்துக்குச் சென்றான்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் - அந்த அரக்கியரெல்லாம் நான் உச்சரித்த மந்திரத்தின் வலிமையால் தூங்கிவிட்டார்கள். அனுமன் பிராட்டியைத் தான் கண்டு பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பினை விவரிக்கின்றான். கோறல் மேற்கொண்டுவிட்ட இராவணனது கொடுமையினின்றும், பிராட்டியைக் காத்த சக்திகளையும் அனுமன் விவரித்துள்ளான். 'என்று இங்கு'- இங்கு இசை நிறைக்க வந்த அசை நிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the lady's chastity, your grace, sire, and true
- pure and good dharma, these and such things kept guarding her together;
- he went away, after ordering there, Speak to her, you demonesses,
- with words both fair and foul; and all of them fell asleep by my spell.
What the poem says
Cītai's life was saved from Irāvaṇaṉ's anger by her own chastity, Irāmaṉ's grace and the power of righteousness. Irāvaṇaṉ left, telling the demoness guards to work on her with both coaxing and threats, but Aṉumaṉ put them all to sleep with a charm, which gave him his chance to speak to her.