கம்பராமாயணம் 6082 · சுந்தர 15.74

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது ஓர் பொழுதில், நங்கை, ஆருயிர் துறப்பதாக
உன்னினள், கொடி ஒன்று ஏந்திக் கொம்பொடும் உறைப்பச் சுற்றி,
தன்மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில், தடுத்து நாயேன்,
பொன் அடி வணங்கி நின்று, நின்பெயர் புகன்ற போழ்தில்.

பொருள் · Meaning in Tamil

அன்னது ஓர்பொழுதில் - அத்தன்மையதானசமயத்தில்; நங்கை - பிராட்டி; ஆர் உயிர் துறப்பதாக உன்னினள் - அருமையான தனது உயிரைவிட்டு விடுவதாக நினைத்தவளாய்; கொடி ஒன்று ஏந்தி கொம் பொடும் உறைப்ப சுற்றி - ஒரு கொடியைக் கையில் எடுத்து ஒரு மரத்தின் கிளையில் உறுதியாகக் கட்டி; தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் - தனது அழகிய கழுத்திலே சேர்த்துச் சுருக்கட்டுக் கொள்ளும் சமயத்தில்; நாயேன் தடுத்து - எளியனான அடியேன் அதனைத் தடை செய்வதாக; பொன் அடி வணங்க நின்று - பிராட்டியின் திருவடிகளை வணங்கி நின்று; நின் பெயர் புகன்ற போழ்தில் - உனது திருநாமத்தைச் சொன்ன பொழுதில்.

குளகமாக அமைந்தஇச்செய்யுள் தொடர், அடுத்த செய்யுளில் சொன்னாள் என்று முடியும். இராமபிரான் திருநாமத்தை அனுமான் உச்சரித்ததே, பிராட்டி சுருக்கட்டுக் கொண்டு உயிர் மாய்ப்பதைத் தடுத்தது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At such a moment the lady resolved to give up
  2. her precious life; she took a creeper, bound it fast to a branch,
  3. and, just as she was setting it round her jewelled neck, I, your dog of a servant, stopped her,
  4. standing to bow at her golden feet and speaking your name; and at that time,

What the poem says

Aṉumaṉ tells how Cītai, in despair, tied a creeper to a tree branch to hang herself, and how he prevented it by stepping forward, bowing and uttering Irāmaṉ's name. The sentence continues into the next verse, which supplies its main verb, she said.

Hearing Irāmaṉ's name was what saved her life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu ōr poḻutil, naṅkai, ār uyir tuṟappatāka
uṉṉiṉaḷ, koṭi oṉṟu ēntik kompoṭum uṟaippac cuṟṟi,
taṉmaṇik kaḻuttil cārttum aḷavaiyil, taṭuttu nāyēṉ,
poṉ aṭi vaṇaṅka niṉṟu, niṉpeyar pukaṉṟa pōḻtil.