கம்பராமாயணம் 6083 · சுந்தர 15.75

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"வஞ்சனை அரக்கர் செய்கை இது"என, மனம் கொண்டேயும்,
'அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து, அளியை என்பால்,
துஞ்சு உறு பொழுதில் தந்தாய், துறக்கல்'என்று உவந்து சொன்னாள்
மஞ்சு என, வண்ணக் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள்.

பொருள் · Meaning in Tamil

மஞ்சு என வனமென் கொங்கை வழிகின்ற மழைக்கண் நீராள் - (மலைமேல் பெய்யும்) மழை போல், அழகும் மென்மையும் தவழும் தனங்களின் மேல் பெய்து தொடும் குளிர்ந்த கண்களின் நீரை உடையவளான பிராட்டி; இது, வஞ்சனை - (நான் இவ்வாறு உன் திருநாமம்) கூறியதை வஞ்சனை உடைய; அரக்கர் செய்கை - அரக்கர்களது செய்கையால்; என மனம் கொண்டேயும் - என்று கருதிச் சந்தேகித்தும்; என் பால் அளியை - (என்னை நோக்கி) என்னிடம் அருள் கொண்டவன் நீ; துஞ்சுறு பொழுதில் - யான் இறக்கும் சமயத்தில்; அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து - மை போல் கரிய திரு மேனியை உடைய இராமபிரானது திருநாமத்தைச் சொல்லி; துறக்கம் தந்தாய் - எனக்குப் பரலோக இன்பத்தைத் தந்தாய்; என்று உவந்து சொன்னாள் - என்று மகிழ்ச்சியோடு என்னிடம் கூறினாள்.

“எம்பிரான் நாமம் சொல்லி உருக்கனன் உணர்வைத்தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ” என்று (கம்ப. 5254.) பிராட்டி கூறியதை அனுமன் நினைவுபடுத்திக் கொண்டு சொன்னது இது. எம்பிரான் திருநாமம் கேட்டல் துறக்க இன்பத்துக்குச் சமமானது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though she suspected in her mind, This is the work of the deceitful demons,
  2. she said with joy, You have spoken the name of him whose colour is collyrium
  3. and shown me kindness; at the hour of my death you have given me heaven;
  4. so she spoke, tears pouring from her rain-cloud eyes onto her soft lovely breasts like a cloudburst.

What the poem says

Completing the previous verse: when Aṉumaṉ spoke Irāmaṉ's name, Cītai at first feared a demon trick, yet still rejoiced, telling him that hearing her dark lord's name at the moment of death was like being given heaven. Aṉumaṉ recalls her words from the earlier scene in Ilaṅkai, where she said no help could be greater than restoring her life by uttering that name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"vañcaṉai arakkar ceykai itu"eṉa, maṉam koṇṭēyum,
'añcaṉa vaṇṇattāṉ taṉ peyar uraittu, aḷiyai eṉpāl,
tuñcuṟu poḻutil tantāy, tuṟakkam'eṉṟu uvantu coṉṉāḷ
mañcu eṉa, vaṉameṉ koṅkai vaḻikiṉṟa maḻaik kaṇ nīrāḷ.