கம்பராமாயணம் 6084 · சுந்தர 15.76

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறிவு உறத் தெரியச் சொன்ன பேர் அடையாளம் யாவும்
செறிவு உற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்;
இறுதியில் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது; எந்தாய்!

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - எமதுதலைவனே !; அறிவு உற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் - பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன பெரிய அடையாளங்களை எல்லாம்; செறிவு உற நோக்கி - அதனைப் பொருத்தமாகப் பார்த்து; நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவு அற எண்ணி - அடியேன்மனத்தில் மாறுபாடுஇல்லாமையை கேடின்றி யோசித்து; வண்ண மோதிரம் காட்ட கண்டாள் - அழகிய (உனது) மோதிரத்தை, நான் காட்ட, பார்த்தாள்; அனையது - அந்த மோதிரம்; இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது - உயிர் போகும் முடிவுக் காலத்தில், உயிரை இறவாத படி நிலை நிறுத்திக் காக்கின்ற (மிருத சஞ்சீவி என்னும்) மருந்தைப் போன்றது.

“மோதிரம்பிராட்டிக்கு உயிர் தந்து ஈயும் மருந்தானது” என்பது, “வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆயது வாழி மணி ஆழி” என்ற (கம்ப. 5290) காட்சியை நினைத்து அனுமன் சொன்னதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having closely considered all the great tokens
  2. I told her clearly so that she would know, and having judged without fail
  3. that there was no guile in my heart, she looked on the beautiful ring when I showed it;
  4. that ring was like the medicine that gives back life at the very end, my lord!

What the poem says

Cītai tested Aṉumaṉ by the signs he described to her, satisfied herself that he was honest, and then saw Irāmaṉ's signet ring. For her it was like the herb that restores life to the dying. Aṉumaṉ is recalling the earlier scene where the ring was hailed as the medicine that brings back a departing life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟivuṟat teriyac coṉṉa pēr aṭaiyāḷam yāvum
ceṟivuṟa nōkki, nāyēṉ cintaiyil tirukkam iṉmai
muṟivu aṟa eṇṇi, vaṇṇa mōtiram kāṭṭak kaṇṭāḷ;
iṟutiyiṉ uyir tantu īyum maruntu ottatu, aṉaiyatu; entāy!